மரபார்ந்த யோகம் சார்ந்து ஒரு தொடர் எழுதவேண்டும் என நண்பர் இளங்கோகிருஷ்ணன் அவர்கள் கேட்டபோது. யோகம் சார்ந்து எண்ணற்ற புத்தகங்கள் எழுதி குவிக்கப்பட்டுள்ளதே, மேற்கொண்டு எதை எழுதுவது என்கிற தயக்கம் இருந்தது, எழுதத்தொடங்கிய மூன்று வாரத்தில், 'முழுமையான யோகம் 'எனும் தலைப்பிற்கு நியாயம் செய்யும் வகையில், யோகத்தின் பல்வேறு விஷயங்களை தொட்டு புதிய ஒன்றை கண்டடைய சாத்தியங்கள் உருவானது. இதே காலகட்டத்தில் தான் ' ஆசிரிய பயிற்சி வகுப்புகளும் ' நடத்திக்கொண்டிருந்தேன் என்பதால், இரண்டிற்கும் சேர்ந்து தயாரித்து, தொகுத்து சொல்ல முடிந்தது.
இவை 'குங்குமம் டாக்டர் ' இதழில் தொடராக வந்து பரவலாக வாசிக்கப்பட்டு, வரவேற்பும் பெற்றது.
மொத்தம் ஐம்பது கட்டுரைகள்.
இனி ஒவ்வொன்றாக இங்கே பதிவிடுகிறேன்.